லிப்ட்டுக்குள் சிக்கி தவித்த டொனால்ட் டிரம்ப்: தீயணைப்பு படையினர் உதவியால் மீட்பு

201607310952352598_Donald-Trump-Rescued-From-Stalled-Elevator-In-Colorado-City_SECVPF

அமெரிக்காவின் கொலாராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள சொகுசு ஓட்டலின் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான கொலாராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள தி மைனிங் எக்ஸ்சேஞ் என்ற சொகுசு ஓட்டலில் இருந்து கொலாராடோ ஸ்பிரிங்ஸ் நகர தீயணைப்பு துறையினருக்கு (உள்ளூர் நேரப்படி) கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது.

அந்த ஓட்டலின் முதல் மற்றும் இரண்டாவது மாடிக்கு இடையில் செயலிழந்துப்போன லிப்ட்டுக்குள் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்பட சிலர் சிக்கி தவிப்பதாகவும் உடனடியாக உதவிக்கு வரும்படியும் ஓட்டல் நிர்வாகிகள் கேட்டு கொண்டனர்.

இதையடுத்து, விரைந்துவந்த தீயணைப்பு படையினர் நேராக இரண்டாவது மாடிக்கு சென்று பழுதடைந்த லிப்ட்டின் மேல் மூடியை திறந்தனர். அதன் வழியாக ஒரு ஏணியை நின்றிருந்த லிப்ட்டுக்குள் இறக்கி, உள்ளே தவித்து கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது பிரசார உதவியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதற்கு முன்னதாக, மைனிங் எக்ஸ்சேஞ்ச் ஓட்டலில் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு வந்திருந்த தனது ஆதரவாளர்களில் பலருக்கு பாதுகாப்பு கருதி கொலாராடோ ஸ்பிரிங்ஸ் நகர தீயணைப்புத்துறை மார்ஷல் (உயரதிகாரி) அனுமதி வழங்க மறுத்ததை டொனால்ட் டிரம்ப் வன்மையாக கண்டித்து, விமர்சித்திருந்தார்.

ஆனால், அந்த கூட்டம் முடிந்து வெளியே வரும்போது லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த டொனால்ட் டிரம்ப்பை அதே
தீயணைப்புத்துறை மார்ஷல் தலைமையிலான படையினர்தான் காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top