தமிழகத்துக்கு தண்ணீர் வராததால் விரக்தி: தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

201607300811375009_farmer-suicide-jumped-palar-reservoir_SECVPF

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகே பெரும்பள்ளம் என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் இருந்த தடுப்பணையை ஆந்திர மாநில அரசு 12 அடியாக உயர்த்தி கட்டியது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரும்பள்ளத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் திரளாக சென்று பார்த்தனர். வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசனும் (வயது 50) அங்கு சென்றார்.

உயர்த்தப்பட்ட தடுப்பணையின் மீது நின்றுகொண்டு, அணையில் நிரம்பியிருந்த தண்ணீரையே சீனிவாசன் வெறித்து பார்த்தார். அப்போது அவர் அருகில் நின்றவர்களிடம் இவ்வளவு தண்ணீர் நிரம்பியும் பாலாற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லையே, தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இந்த தண்ணீர் தமிழகத்திற்கு வந்திருக்குமே என்று விரக்தியுடன் கூறினார்.

வேதனை தாங்காமல் திடீரென அவர் தடுப்பணையில் நிரம்பி இருந்த தண்ணீரில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பாலாற்றில் தண்ணீர் வராததால் வேதனையடைந்த விவசாயி தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்ட விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top