என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்: இந்தோனேசியா சிறையில் இருக்கும் குர்தீப்சிங் மனைவி உருக்கம்

314814394-Gurdip-Singh_6

இந்தோனேசியாவில் கடைசி நிமிடத்தில் இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனைவி, “என் கணவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்” என உருக்கமுடன் கூறினார்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியர் குர்தீப்சிங் (வயது 48) உள்ளிட்ட 14 பேரின் மரண தண்டனை நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியர் குர்தீப் சிங்கை தண்டனையில் இருந்து காப்பாற்றுமாறு அவரது குடும்பத்தினர், மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தனர். மத்திய அரசும், அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், குர்தீப் உள்ளிட்ட 10 பேரது மரண தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. கொட்டும் மழைக்கு இடையே 4 பேரது மரண தண்டனை மட்டும் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குர்தீப் சிங்கின் மரண தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டு விட்டதை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று உறுதி செய்தார்.

இதுபற்றி அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) குர்தீப் சிங்கின் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டபடி நிறைவேற்றப்படவில்லை என இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி குர்தீப் சிங்கின் மனைவி குல்விந்தர் கவுர் கூறியதாவது:-

இன்று காலை (நேற்று காலை) நான் அவருடன் இருமுறை பேசினேன். அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். 4 பேரை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரது தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டு விட்டது.

(கடைசி பிரார்த்தனைக்காக) மத போதகர் வரவழைக்கப்பட்டு விட்டார். அவரது உடலை எடுத்துச்செல்வதற்கு வேன்கூட வந்து விட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டனர். அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டார்.

மரண தண்டனை ரத்தாகி, பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதால் அரசிடம் முறையிடும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் இங்கு வந்து குடும்பத்தினரை சந்திக்க விரும்புகிறார். அவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். அவர் குற்றம் செய்திருந்தாரேயானால், இந்த தண்டனை அவருக்கு போதுமானது.

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்து வருகிறார். மரண தண்டனையில் இருந்து அவரை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். மத்திய அரசுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குர்தீப் சிங், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

19 comments

  1. Heippa Koodin väki! Minkä kokoinen on tuo Lehtorinteen kalenteritaulu? Ja onko taulua saatavana myös ilman kalenteria eli pelkkänä mustapohjaisena? Koko oli myös kiva tietää, vai onko tuotteesta mahdollisesti erikokoisia versioita (kuten Kotona Designin lie-tt/magnieutitauluista)?-Sanna

  2. When you think about it, that’s got to be the right anrwse.

Your email address will not be published.

Scroll To Top