நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி

160729101827_pope_2_512x288_epa_nocredit

நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார்.

இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் மற்றும் அவர்களை காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த போலந்து மக்களை சந்தித்தப் பின்னர், அவர் விஷவாயு கூடங்கள் மற்றும் கல்லறைகளில் நடந்து சென்று மௌனமாக செபித்தார்.

போலந்து நாடு கிறிஸ்தவ மதத்தை தழுவிய 1050-வது ஆண்டு நினைவை முன்னிட்டு நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் போப் பிரான்சிஸின் மூன்றாம் நாள் பயணத்தில் இந்த சித்ரவதை முகாமை அவர் சந்தித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Thank you Hubert for checking in on me30#2&8; And yes, I believe that is exactly what I have been doing. I highly recommend it to everyone. HE is WONDER FULL!. Thank you brother! God Bless!!!

Your email address will not be published.

Scroll To Top