ரியோ ஒலிம்பிக் 2016: ரஷ்யா நாட்டின் பளுதூக்கும் வீரர்களுக்கும் தடை

Khadzhimurat-Akkaev01

ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். போல்வால்ட் சாதனை மங்கை இசின்பேஎவா, செர்ஜி கபென்கோவா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் அடங்குவார்கள்.

தடகளத்தில் ஒரே ஒரு ரஷியர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதி அளித்து உள்ளது. நீளம் தாண்டும் வீராங்கனை டாரியா கிறிஸ்னா மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ரஷ்ய பளுதூக்கும் வீரர்களுக்கும் ஒலிம்பிக் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஊக்கமருந்து குற்றங்களில் ஈடுபட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி ரஷ்யாவை அனைத்து தரப்பு ஒலிம்பிக் போட்டியில் இருந்தும் வெளியேற்றுமாறு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top