5-வது நாள் ஆடுகளம் போன்று அடுத்த போட்டி இருக்கப்போவதில்லை: ஆஸி. பயிற்சியாளர் லா சொல்கிறார்

dc-Cover-i69459j93d6s9tjoprbato1bk0-20160504174036.Medi

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி பெற 185 ரன்கள் தேவை. ஸ்மித், வோக்ஸ் களத்தில் இருப்பதால் ஆஸ்திரேலியா நம்பிக்கையுடன் இருக்கிறது. ஹெராத், சன்டகான் ஆகியோரை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம் என்று இலங்கை நினைக்கிறது.

ஆனால், இலங்கை நினைப்பதுபோல் ஐந்தாவது நாள் ஆடுகளம் போன்று தோற்றமளிக்கவி்ல்லை என்று ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘பல்லேகெலேயில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் ஒன்றைக்கூட இலங்கை வென்றதில்லை. சமீபத்தில் பாகிஸ்தான் அணி நான்காவது இன்னிங்சில் 377 ரன்களை சேஸிங் செய்தது.

இன்றைய இந்த ஆடுகளம் ஐந்தாவது நாள் ஆடுகளம் போன்று இருக்கப்போவதில்லை. நாங்கள் மூன்று நாட்கள் விளையாடியதில் மழைக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் பெரிய சேஸிங் செய்யப்பட்டுள்ளதை வரலாறு சொல்கிறது. ஆடுகளம் மோசமான வகையில் சிதைந்து காணப்படவில்லை. மிட்செல் ஸ்டார்க் பந்து வீசும்போது கால் பதிக்கும் இடத்தை, அவர் வசதிக்காக உடைக்க நினைக்கும்போது அது கடினமாக இருந்தது. மிகவும் கடினமாகவும், டிரையாகவும் இருந்தது. இன்றரவு மழை மற்றும் சூழ்நிலை காரணமாக ஆடுகளத்தின் மேற்பரப்பில் சற்று ஈரப்பதம் காணப்படலாம்.

ஆகையால் காலை முதல் அரை மணி நேரம் கடினமாக இருக்கும். அதன்பிறகு ஆடுகளம் டிரை ஆனபிறகு எந்த பிரச்சினையும் இல்லை. முதல் இரண்டு நாட்கள் கடினமாக இருந்தது. அதன்பின் ஆடுகளம் டிரையாக மாறியது. இன்றைக்கும் இதுபோல்தான் இருக்கும்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top