2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Parliment

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் என்னும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் இருவர் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி அண்மையில் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “சமீபகாலமாக தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிட நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக நாட்டில் குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன” என்றார்.

இதற்கு பதில் அளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநிலம் தொடர்புடையது. சம்பவத்துக்கு பின்பு மத்திய பிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். குற்றவாளிகள் யாரும் தப்பி விட முடியாது” என்றார்.

மந்திரியின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. I think you are ri3tW&#82g0;he all want to be understood but at the same time we have to make the MAIN thing (Majesty of the Lord) the main thing. I do believe your blog is serving a purpose. I do think it is self examination on each of our parts. In that respect, we all, young and old have something to learn and at the same time learn from each other. Take it as encouragement instead of critism. (sp).

Your email address will not be published.

Scroll To Top