மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களின் வாரச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2CE5C55000000578-0-image-m-17_1443529020615

இங்கிலாந்தில் உள்ள பழமையான கால்பந்து கிளப் அணிகளில் ஒன்று மான்ஸ்செஸ்டர் யுனைடெட். இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி முக்கிய பங்கு வகிக்கும்.

1878-ம் ஆண்டு நியூட்டன் ஹீத் எல்.ஒய்.ஆர் கால்பந்து கிளப் என்று தொடங்கப்பட்டு பின்னர் 1902-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் என்று பெயர் மாற்றம் பெற்றது. 1910-ல் இருந்து ஓல்டு டிராஃப்போர்டை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. இந்த அணி ஒவ்வொரு வீரர்களையும் மில்லியன் கணக்கில் பவுண்டு கொடுத்து வாங்கியுள்ளது.

தற்போது பிரான்ஸ் நாட்டின் நடுக்கள வீரரான பால் போக்பாவை சுமார் 100 மில்லியன் பவுண்டுக்கு யுவான்டஸ் கிளப்பிடம் இருந்து வாங்கியுள்ளது. இதற்கான அனைத்து வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் சார்பில் மருத்துவ பரிசோதனையும் நடந்து முடிந்து விட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மட்டும்தான் பாக்கியுள்ளது. 100 மில்லியன் பவுண்ட டிரான்ஸ்ஃபர் என்பது கால்பந்து கிளப் அணி வரலாற்றில் இதுதான் முதன்முறை. இதற்கு முன் இப்படி ஒரு டிரான்ஸ்ஃபர் நடந்ததே இல்லை.

இதில் போக்பாவிற்கு வாரச் சம்பளம் மட்டும் சுமார் 2,75,000 பவுண்டு கொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் சம்மதித்துள்ளது.

மான்செஸ்டர் அணியில் விளையாடும் வீரர்கள் வாங்கும் சம்பளத்தை பார்ப்போம் (வாரச்சம்பளம்)…

1. பால் போக்பா- 2,75,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ. 2,42,80,568.40)

2. வெயின் ரூனே – 2,60,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ. 2,29,56,173.76)

3. ஸ்லாடன் இப்ராஹிமோவிக் – 2,50,000 பவுண்டு (இந்திய மதிப்பில் 2,20,73,244.00)

4. ஹென்றிக் – 2,00,000 பவுண்டு (ரூ. 1,76,58,595.20)

5. பாஸ்டியான் ஸ்வெயின்ஸ்டெய்கர் 2,00,000 பவுண்டு (ரூ. 1,76,58,595.20)

6. டேவிட் டி ஜியா – 2,00,000 பவுண்டு (ரூ. 1,76,58,595.20)

7. ஜூயான் மாடா 1,40,000 பவுண்டு (ரூ. 1,23,61,016.64)

8. அஸ்லெ யங் 1,10,000 பவுண்டு (ரூ. 97,12,227.36)

9. மோர்கன் ஸ்னெய்டர்லின் – 1,00,000 பவுண்டு (ரூ. 88,29,297.60)

10. மெம்பிஸ் – 90,000 பவுண்டு (ரூ. 79,46,367.84)

11. மரௌயனெ பெல்லைனி 80,000 பவுண்டு (ரூ. 70,63,438.08)

12. கிறிஸ் ஸ்மாலிங் 80,000 பவுண்டு (ரூ. 70,63,438.08)

13. மைக்கேல் கார்ரிக் 80,000 பவுண்டு (ரூ. 70,63,438.08)

14. டேலே பிளின்ட் 75,000 பவுண்டு (ரூ. 66,21,973.20)

15. அன்டர் ஹெர்ரேரா 75,000 பவுண்டு (ரூ. 66,21,973.20)

மேலும் 19 வீரர்களில் கடைசியாக 1300 பவுண்டு வரை வாரச் சம்பளம் வாங்குகிறார்கள். அணியின் மானேஜர் ஜோஸ் மௌரினோ 3,12,500 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ. 2,75,91,555) சம்பளம் வாங்குகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top