இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் நியமனம்

142289.3

இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பரான நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், பீல்டிங் சரியில்லாமல் இருக்கிறது.

போதாஸ் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்து தேவையான நுணுக்கங்களை வழங்குவார். அவருடைய ஆலோசனைகள் இலங்கை அணிக்கு வலுசேர்க்கும் என்று நம்புகிறோம். அவருடைய நியமனம் நேர்மறையாக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டது’’ என்றார்.

218 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள போதாஸ், 659 பேரை அவுட்டாக்கியதுடன், 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இவர் இங்கிலாந்து கவுண்டி அணியான லெஸ்செஸ்டர்ஷைர் அகாடமியின் இயக்குனராக இருந்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top