குறைந்த ஸ்கோரை பற்றி கவலைப்படாத புஜாரா

pujara-out-sad

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றதும், அவரது இடத்தை புஜாரா பிடித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் புஜாரா அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்த அவர், 2-வது இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். 2012-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராக ஐதராபாதில் நடைபெற்ற போட்டியில் 159 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் புஜாராவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரட்டை சதம், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2013-ல் ஜோகன்ஸ்பார்கில் 153 ரன்கள் என அசத்தினார். ஆனால் அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற டெஸ்டில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின் இலங்கை அணிக்கெதிராக விளையாடும்போது தவான் மற்றும் முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் புஜாராவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய அவர் சதம் அடித்தார்.

அதன்பின் தென்ஆப்பரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார். மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தார். அதன்பின் இதுவரை ஐந்து இன்னிங்சில் 21, 31, 14, 28 மற்றும் 16 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அமைந்தது எல்லாம் கடினமாக ஆடுகளம்.

தற்போது நாளை நடக்கவிருக்கும் 2-வது டெஸ்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புஜாரா இந்த மோசமான ரன் பற்றி கவலையில்லை என்கிறார்.

இதுகுறித்து புஜாரா மேலும் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக நன்றாக பேட்டிங் செய்தேன். குறிப்பாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான சவால் நிறைந்த ஆடுகளத்தில் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தேன். என்னுடைய சதம் மற்றும் பெரிய இரட்டை சதங்கள் ஆகியவற்றையும் சேர்த்து எனது பங்களிப்பை பார்க்க வேண்டும். அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பு என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். முதல் போட்டியில் நான் மோசமான ஷாட் அடித்து அவுட் ஆகிவிட்டேன். இதைத் தவிர நான் பேட்டிங்கில் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறேன் என்றே உணர்கிறேன்.

முதல் செஷனில் பந்து பயங்கரமாக மூவிங் ஆகும்போது நான் கடினமாக விளையாடினேன். உண்மையாகவே முதல் டெஸ்டில் நான் மோசமாக விளையாடினேன். இந்த முக்கியமான போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் விஷயம் உள்ளது. ஒட்டுமொத்த அணியாக நன்றாக செயல்பட்டோம்.

முதல் டெஸ்டில் சரியாக விளையாடததால் ஜமைக்காவில் நடைபெறும் 2-வது போட்டிக்காக கூடுதலாக வலைப்யிற்சி எடுத்துக்கொண்டேன். வலைப்பயிற்சி செய்வதற்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் பயிற்சிக்கு தயாராவேன். இது எல்லாம் வீரர்களின் தனிபட்ட விஷயமானது. நீங்கள் பயிற்சியை விரும்பினால் பயிற்சி எடுக்கலாம். அல்லது ஓய்வு எடுக்கலாம். வீரர் என்ற வகையில் வாய்ப்பு கிடைக்கும் நாளில் பயிற்சிக்கு தயராகினேன்.

நான் என்னுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடி எனது பங்களிப்பை வழங்கி வருகிறேன். நான் கடுமையாக பயிற்சி எடுத்து விளையாடி வருகிறேன். யார் என்ன சொன்னாலும் எனது தற்போதைய ஆட்டம் குறித்து கவலை அடையத் தேவையில்லை. அதைப் பற்றி நான் சிந்திக்கவும் வேண்டியதில்லை’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top