செக் மோசடி வழக்குகளில் ஆஜராக உத்தரவு: விஜய் மல்லையாவின் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

SC-issues-notice-to-Vijay-Mallya-on-bank-plea-seeking_SECVPF

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு சென்று விட்டார். அவர் லண்டனில் குடியேறி உள்ளார். அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன. விஜய் மல்லையா ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று அண்மையில் பணமோசடி தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை இங்குள்ள விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன.

இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள் அவரது வங்கி கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன. இதுதொடர்பான பல செக் மோசடி வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளன.

இவற்றில் சில வழக்குகளில் ஆஜராகாததால் விஜய் மல்லையாவுக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விஜய் மல்லையா மீதான செக் மோசடி வழக்குகளில் நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவரது வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மேற்படி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top