வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன்: அமித் மிஸ்ரா

amit-mishra--india-2015

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எல்லோரும் சிறப்பாக பந்து வீச முயற்சித்து வருகிறோம். அதை தான் நானும் செய்து வருகிறேன். விக்கெட்டுகள் வீழ்வது என்பது நமது கையில் இல்லை. சில சமயங்களில் எதிரணியின் பேட்டிங் பார்ட்னர்ஷிப் வலுப்பெறுகையில் இருமுனையில் இருந்தும் பந்து வீச்சில் நெருக்கடி அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

முதலாவது டெஸ்டில் அதை தான் செய்தோம். முதல் இன்னிங்சில் நான் ஒரு முனையில் இருந்து நெருக்கடி கொடுக்க மறுமுனையில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தும் வேலையை அஸ்வின் செய்தார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பது தான் எனது பணியாகும். அடுத்த டெஸ்டில் என்னால் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top