சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் நாளை தொடக்கம்: 300 பேர் பங்கேற்பு

9-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி நாளை (29-ந்தேதி) முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் பள்ளியில் நடக்கிறது.

International-Pete-Rating-Chess-Tournament-tomorrow_SECVPF

இந்தப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300 பேர் பங்கேற்கிறார்கள். அபுதாபி, பக்ரைனில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நடப்பு சாம்பியன் ஹேமந்த்ராஜ், (ரேட்டிங்புள்ளி 2080 ), ராஜரிஷிகார்த்திக், ரோகன், கார்முகிலன் போன்ற முன்னணி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

10 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டி கவிஸ் முறையில் நடக்கிறது. மொத்த பரிசு தொகை ரூ.1.20 லட்சமாகும். சாம்பியன் பட்டம் பொறுபவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். முதல் 25 இடங்கள் வரை பரிசு கிடைக்கும். மேற்கண்ட தகவலை மாடர்ன் பள்ளி முதல்வர் கே. மோகனா, போட்டி ஒருங்கிணைப்பாளர் வி.ரவிச்சந்திரன் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top