தலித்கள் மீதான தாக்குதல் குறித்து மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

201607270617421750_Narendra-Modi-silence-on-Dalit-assault-devaluation-of-PM_SECVPF

குஜராத்தின் கிர்–சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. மேலும் பீகார் மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், தலித் மக்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் குறித்து நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது, அவர் வகிக்கும் பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பாரத்சிங் சோலங்கி கூறுகையில்:-

மோடி குஜராத் மாநிலத்தில் இருந்து வாக்குகளை பெற்றார். பிரதமர் ஆகியுள்ளார். தலித் மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசவும் மறுக்கிறார். அப்படி பேசினால் குஜராத் மாநில பா.ஜ.க.வை பாதிக்கும் என்று அச்சப்படுகிறார். இது ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதோடு, பிரதமர் பதவியையும் களங்கப்படுத்துகிறது.

தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை குஜராத் அரசு ஒடுக்குகிறது. குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் மற்றும் ஏழை குடி மக்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. தலித் விரோத போக்கினை குஜராத் அரசு கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top