விளையாட்டு கிராமம் திறப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

31 கட்டடங்கள் கொண்ட இந்த வளாகத்தில், டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள், நீச்சல் குளங்கள், 3 கால்பந்து மைதானங்கள் அளவிலான சமையல் மற்றும் உணவு பரிமாறும் அறை, சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் என பல்வேறு வசதிகளும், கண்ணைக் கவரும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த வளாகத்தில் 10,160 அறைகள், 18,000 படுக்கைகள், துணி துவைப்பதற்கான 7 லான்டரிகள், கிளீனிக்குகள், பெரிய உடற்பயிற்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10,500 வீரர்கள், 7,000 பணியாளர்கள் குடியேற உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா, டென்மார்க், கனடா, பிரிட்டன், போர்ச்சுகல், ஃபின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் குடியேறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top