சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து!

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் கண்ணாடி தூண்கள் அடிக்கடி உடைந்து விழுந்து வருகின்றன. இதுவரை 64 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்தின் 17-வது நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.

மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top