மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Hyderabad-government-hospital-due-to-power-cut_SECVPF

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து பலமுறை மின்தடை ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் அதை சமாளிக்க 4 பெரிய ஜெனரேட்டர்கள் உள்ளன.

ஆனால் மின்சாரம் விட்டுவிட்டு வந்ததால் என்ன காரணத்துக்காக மின்தடை ஏற்படுகிறது என்பதை கண்டு பிடிப்பதற்காக ஜெனரேட்டர்கள் இயக்கப்படவில்லை.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அறுவை சிகிச்சை பிரிவு சாதனங்கள், பிரசவ வார்டில் உள்ள சாதனங்கள், செயற்கை சுவாச சாதனங்கள், மருத்துவ சாதனங்கள், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சாதனங்கள் செயல்படவில்லை.

இதனால் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் 21 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து காந்தி மருத்துவமனை டாக்டரும், தெலுங்கானா அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஆர்.ரகு கூறுகையில், “நான் 14 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். இங்கு தினமும் சராசரியாக 10 நோயாளிகள் இறப்பது வழக்கம். எனவே மீதமுள்ள நோயாளிகள் மின்தடை பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி மருத்துவ ஊழியர்கள் கூறுகையில், “நோயாளிகளின் இறப்பிற்கு மின்தடையே காரணம். மின்தடைக்கான காரணத்தை கண்டு பிடிப்பதற்காக 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்படாததே அவர்களின உயிரை பலி வாங்கி விட்டது” என்றனர்.

சம்பவத்தின் போது மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த பேராசிரியர் சி.வி.சாலம் கூறுகையில், “உயிரிழந்த 21 பேர் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பின்னணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் உயிர் இழப்புக்கும், மின்தடைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கலாம். நாளை முதல் இது தொடர்பான விசாரணை தொடங்கும்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை மந்திரி லக்ஸ்மா ரெட்டி கூறியதாவது:–

ஆஸ்பத்திரியில் நடந்த உயிர் இழப்புக்கு மின்தடையே காரணம் என்று கூறுவது மிக மிக தவறு. ஆனால் தற்போது ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இறக்கும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனை தருவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top