தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 956 வீரர்கள் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்து 956 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
Tamil-Nadu-956-players-registered-to-play-in-the-Premier_SECVPF
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் ஐ.பி.எல். பாணியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடக்கும் இந்த போட்டியில் தென்சென்னை, காஞ்சீபுரம், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதுவரை 956 வீரர்கள் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 21 வீரர்கள் இடம் பெறுவார்கள். வெஸ்ட் இண்டீசில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், முரளிவிஜய் இருவரும் தாயகம் திரும்பியதும், அவர்களுக்கு விளையாடுவதற்கு ஏற்ப கால இடைவெளி இருந்தால் நிச்சயம் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் பங்கேற்பார்கள்.

சாமானியர்களும் போட்டி யை கண்டுகளிக்கும் வகையில் டிக்கெட் கட்டணம் இருக்கும். இந்த ஆட்டங்கள் அனைத்தும் இரவில் நடத்தப்படுவதால் நத்தம் மற்றும் நெல்லையில் ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் திரும்பி செல்வதற்கு பஸ் மற்றும் வேன் வாகன வசதி செய்து தரப்படும். மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டம், அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும். ஸ்டார் இந்தியா சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

மாவட்ட அளவிலும் சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த போட்டி நடத்தப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் விசுவநாதன், பிரீமியர் லீக் நிர்வாக குழு உறுப்பினர் எல்.சிவராமகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன், செய்தி தொடர்பாள டாக்டர் பாபா ஆகியோர் சென்னையில் நேற்றிரவு நிருபர்களிடம் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top