நெல்லை தாமிரபரணி படுகொலையில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

thirumaa

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999–ம் ஆண்டு 23–ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப் பாலம் பகுதியில் பேரணி வந்த போது, அப்போது ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றில் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 17–ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் கீழ் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று நடந்தது.

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு பகல் 1 மணி அளவில் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகன் டாக்டர் ஷியாம் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

டாக்டர் ஷியாம் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தங்கராம கிருஷ்ணன் (மத்திய மாவட்டம்), ஜெயக்குமார் (மேற்கு), சுரேந்திரன் (தெற்கு), நடராஜன் (கிழக்கு). இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பா, கட்சி நிர்வாகிகள்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலை முன்பு இருந்து ஊர்வலம் புறப்பட்டது. கட்சியினர் கறுப்பு நிற சீருடை அணிந்து ஊர்வலமாக தாமிரபரணி ஆற்று பகுதி வரை வந்தனர். பின்னர் ஜான்பாண்டியன் ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் கூறும் போது, “தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தி வருகிறோம். தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை அரசு நினைவு சின்னம் அமைக்காததது வேதனை அளிக்கிறது. இனியாவது உயிர் நீத்த தொழிலாளிகளுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்“ என்றார்.

அவருடன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் சந்திரன், நல்லுசாமி, கொள்கை பரப்பு செயலாளார் இமான்சேகர், மண்டல செயலாளர் அழகர்சாமி, மாநகர் மாவட்ட செயலாளர்கள் கண்மணி மாவீரன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அவருடன், மாநில துணை செயலாளர் கனியமுதன், மாநில அமைப்புச் செயலாளர் ஆற்றலரசு, துணை செயலாளர் பாண்டியம்மாள், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சினத்தாய், கட்சி நிர்வாகிகள் அமுதா மதியழகன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி சமூக நலப்பேரவை மாநில ஆலோசகர் எஸ்.கே.எம்.சிவகுமார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் காமராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரராஜ பெருமாள், கட்சி நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் பாலன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தயா சங்கர், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம், பொதுச்செயலாளர் தமிழ் செல்வன், விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கட்சி நிர்வாகிகள் முருகதாஸ், கணேச மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் சண்முகராஜ் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், மாநில செயலாளர்கள் சிந்தா சுப்பிரமணியன், ஏ.பி.சரவணன், சிறுபான்மை மாநில துணை தலைவர் ரமேஷ் செல்வன், மத்திய மாவட்ட செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில தவைவர் டி.தேன்மோகன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் காளீஸ்வரன், பொருளாளர் அசோக்பாண்டியன், கட்சி நிர்வாகிகள் சாலமோன், பாலு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் பாசறை அமைப்பாளர் இந்தியா, கட்சி நிர்வாகிகள் ஹூமாயூன், ராம்குமார், அன்பரசு, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தமிழ்மாறன், சேகர், தமிழ் வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதிதமிழர் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட அம்பேத்கார் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தம்பிதுரை தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜ்ய மள்ளர் கட்சி மாநில தலைவர் எம்.சி. கார்த்திக் தலைமையில் தொழிலாளர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆதி தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதி தமிழன் தலைமையிலும், மத்திய–மாநில தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் தலைமையிலும், தமிழ் தேசிய விடுதலை கழகம் மாணவர் அணி பொது செயலாளர் கணேசமூர்த்தி தலைமையிலும், பகுஜன் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் மணிவாசகம் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top