புட்சால் கால்பந்து: அரைஇறுதி வாய்ப்பை இழந்தது சென்னை

முதலாவது பிரீமியர் புட்சால் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்றிரவு நடந்த கொச்சி–சென்னை அணிகள் இடையிலான திரிலிங்கான கடைசி லீக் ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் சென்னை அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போதிலும், கொச்சி வீரர்கள் போராடி மீண்டு விட்டனர். இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த மும்பை (9 புள்ளி), கொச்சி (5 புள்ளி) அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்தது. 4 லீக் ஆட்டங்களில் 2 தோல்வி, 2 டிரா கண்ட சென்னை அணி (2 புள்ளி) வெளியேறியது.

‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் கோவா அணி 3–0 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை விரட்டி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை–கொல்கத்தா, கோவா–கொச்சி அணிகள் எதிர்கொள்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top