ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் முன் சட்ட ரீதியான மாற்று வழிகளை ஆராயும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

635989344157439132-EPA-FILE-RUSSIA-SOCHI-OLYMPICS-DOPING

ரியோ டி ஜெனீரொவில் நடைபெறும் அடுத்த மாத விளையாட்டுகளில் ரஷியாவின் மீது உடனடியான மற்றும் முழுமையான தடைவிதிப்பதை மட்டும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்துள்ளது.

தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் சட்ட ரீதியான மாற்று வழிகளைக் கண்டறியப் போவதாக இந்த கமிட்டியின் 15 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு தெரிவித்திருக்கிறது.

ஊக்கமருந்து சோதனைகளில் ரஷிய அரசின் ஆதராவோடு பரவலாக நடைபெற்றிருக்கும் குற்றம் காணத்தக்க அறிக்கை பற்றி இந்த கமிட்டி விவாதித்த்து.

இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து ரஷ்ய அதிகாரிகளையும், ரியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தடை செய்வதாக கூறியுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்து சோதனை முடித்த ரஷியாவின் எல்லா தடகள விளையாட்டு வீர்ர்களின் சோதனையை மீண்டும் நடத்த போவதாக தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய விளையாட்டுக்கள் 2019 உள்பட ரஷியாவில் நடத்த திட்டமிட்டுள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் இடைநிறுத்தி வைக்க, எல்லா கூட்டமைப்புக்களையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top