ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது

polic

மதுரையில் பொறியாளர் தற்கொலையில் தனியார் [ரிலையன்ஸ்]  நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் பொறியாளர் லெனின் (23). இவர் தேசிய வங்கி ஒன்றில் கல்விக் கடன் வாங்கி இருந்தார். தனியார் ரிலையன்ஸ் ஏஜென்சி நிறுவனம் மூலம் கல்விக் கடனை வசூலிக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஏஜென்சி நிறுவனம் லெனினுக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டியதால் மனமுடைந்த அவர், சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்தார்.

இந்நிலையில், அந்த தனியார் ஏஜென்சி உரிமையாளர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், முனிச்சாலை சந்திப்பில் நேற்று கூடினர். அருகி லுள்ள சம்பந்தப்பட்ட தனியார் வர்த்தக மையத்தை முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்தனர். அப்போது, சிலர் கையில் இருந்த தக்காளி, முட்டைகளை வர்த்தக மையத்தில் வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பாக, பாலா உட்பட 35-க் கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top