மருத்துவ நுழைவு தேர்வுக்கான இரண்டு மசோதா சட்டங்கள் இன்று மக்களவையில் தாக்கல்

lok-sabha-main

மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான இரண்டு மசோதா சட்டங்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகை செய்யும் 2 அவசர சட்டங்களை மத்திய அரசு கடந்த மே மாதம் பிறப்பித்தது.

அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் 6 மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். அதன்படி 2 அவசர சட்டங்களுக்கு மாற்றாக, இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்த) மசோதா 2016 மற்றும் பல் மருத்துவர்கள் (திருத்த) மசோதா 2016-ஐ மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top