சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை: சானியா மிர்சா பேட்டி

T330_140005_sania_mirza

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்தி நடிகர் சல்மான்கான் விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பேனா? என்று கேட்கிறீர்கள். சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. ஆனால் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.

சினிமா தயாரிப்பாளர் பராக்கான் எனக்கு நல்ல நண்பர். அவர் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் கிடையாது. எனது வாழ்க்கை வரலாறு குறித்த படம் எடுக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது. எனது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன். என்னை பற்றி படம் எடுத்தால் எனது கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர்  பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.

பரினீதி என்னை போன்ற தோற்றம் கொண்டவர். இதனால் அவர் நடித்தால் நன்றாக இருக்கும். ஒலிம்பிக் போட்டிக்கு மற்ற போட்டிகளை போல் சிறப்பாக தயாராகி வருகிறேன். பதக்கம் வெல்ல முடியுமா? என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. ரோகன் போபண்ணாவுடன் இணைந்து பல போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எல்லா வகையிலும் முயற்சிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top