அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார்.

Thiruvalluvar-statue-no-welcome-in-Haridwar_SECVPF

அதன்பேரில் தமிழ்நாட்டில் இருந்து 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயார் செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் புகழ்பெற்ற இடமான கர்கிபாரி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. ஹரித்துவார் மாவட்ட நிர்வாகமும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால் சிலை நிறுவ கொண்டு செல்லப்பட்ட போது உள்ளூர் பூசாரிகள், சில கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக பக்தர்கள் திரளும் இடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைக்க கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்படவில்லை. இதைத் தொடர்ந்து சங்கராச்சார்யா சவுக் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கும் திருவள்ளுவர் சிலை வைக்க எதிர்ப்பு எழுந்தது.

ஹரித்துவார் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு நன்கியால் பல இடங்களை ஆய்வு செய்தபோது திருவள்ளுவர் சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியது. “திருவள்ளுவருக்கும் ஹரித்துவாருக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று போராட்டக்காரர்கள் கேட்கிறார்கள்.

மேலும் திருவள்ளுவரை தலித் என்று கூறிய சர்ச்சையும் எழுந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் திருவள்ளுவர் சிலை நிறுவும் விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி கயிற்றால் கட்டி ஹரித்துவாரில் உள்ள மேலபவன் அலுவலகம் முன்பு கீழே போட்டு வைத்துள்ளனர்.

இதனால் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top