தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை விரைவில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள் என திருநாவுக் கரசர் தெரிவித்தார்.

thirunavukkarasar--600

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அறிவிப்பார்கள்?. என்னையோ அல்லது வேறு யாரையோ தலைவராக அறிவித்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சியை வளர்க்க இணைந்து செயல்படுவோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கக்கூடாது என்று கூறியதாக செய்திகள் வந்தன. இதில் எத்தகைய உண்மை உள்ளது? என்பது தெரியவில்லை. இளங்கோவன் தரப்பினர் இதற்கு மறுப்பு அறிக்கைக்கூட வெளியிடவில்லை.

இளங்கோவனை பலர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டபோதும் நான் அவருடன் இணைந்தே பணியாற்றினேன். தொடர்ந்து அவருடன் நல்லுறவில்தான் இருந்து சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததை அனைத்து தொண்டர்களும் அறிவர். அவருடைய நன்றி உணர்ச்சிகளுக்கு எனது நன்றி.

நான் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்தேன். பின்னர் பா.ஜனதா கட்சிக்கு சென்றேன். அதன்பிறகுதான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தேன். இது சோனியா, ராகுல் காந்தி இருவருக்கும் தெரியும். நான் எதையும் மறைக்கவில்லை. எந்த கட்சியில் இருந்தாலும் யாருக்கும் நான் துரோகம் செய்தது கிடையாது.
ப.சிதம்பரம் வார்டு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்கிறார்கள். அவர் 7 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top