ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, பவார், கரத் உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காததினால் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

CIC-notice-to-Rajnath-Singh-Sonia-Gandhi-Mayawati-Prakash_SECVPF

காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளிடம் நன்கொடைகள், நிதி, உள்கட்சி தேர்தல்கள் ஆகியவற்றை பற்றிய விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின்படி அளிக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.  அவர்களில் ஆர்.கே. ஜெயின் என்பவரும் ஒருவர்.

தனது புகாரினை கையாளுவதில் மத்திய தகவல் ஆணைய பதிவாளர் ரெட்டை நிலையினை கடைப்பிடிக்கிறார் என ஜெயின் குற்றம் சாட்டினார்.

2013ம் ஆண்டுக்கான தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த கட்சிகள் உரிய பதிலளிக்கலாம் என மத்திய தகவல் ஆணையம் அறிவித்தது.  இதனை அடுத்து ஜெயின் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆனால் எந்த பதிலும் அவர்களிடம் இருந்து கிடைக்காத நிலையில், தகவல் ஆணையத்திற்கு ஜெயின் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங், சோனியா காந்தி, மாயாவதி, சரத் பவார், பிரகாஷ் கரத் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோரை நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் புதிய நோட்டீஸ்களை அனுப்பியது.  தேசிய அரசியல் கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அவர்களில் சோனியா காந்தியின் பெயரை குறிப்பிட்டும் மற்ற கட்சிகளுக்கு அவர்களது தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  அவர்கள் அனைவரும் வருகிற ஜூலை 22ந்தேதி தகவல் ஆணையர்ளர்கள் பிமல் ஜுல்கா, ஸ்ரீதர் ஆச்சர்யுலு மற்றும் சுதீர் பார்கவா ஆகியோர் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், 2016ம் ஆண்டு ஜூலை 20ந்தேதிக்குள் உங்களது கருத்துகள் அல்லது பதிலை அளிக்க தவறினால் மற்றும் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ஆஜராக தவறினால், உங்களை தற்காத்து கொள்ள நீங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என கருதப்படும்.  இந்த விவகாரம் சட்டப்படி நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top