எந்த அரசியல் கட்சியிலும் சேரவோ, புதிய அரசியல் கட்சியை உருவாக்கவோ எண்ணமில்லை: ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்தனர்.

கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்நிலையில், எந்த அரசியல் கட்சியிலும் சேரவோ, புதிய அரசியல் கட்சியை உருவாக்கவோ எண்ணமில்லை என்று ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹர்திக் பட்டேல் கூறியதாவது:-

பட்டேல் சமுதாயத்தினருக்காக இடஒதுக்கீடு கோரிக்கைக்காக அரசியலமைப்பு எல்லைக்கு உட்பட்டு தொடர்ந்து போராடுவேன். எங்கெல்லாம் பட்டேல் சமுதாயத்தினர் உள்ளனரோ, அவர்களை ஒருங்கிணைப்பேன்.

விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரின் பிரச்சனைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்றவற்றிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top