தல 57 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Thala-57-movie-ajith-dual-role_SECVPF

சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி தேடுதல் படலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால், ஏற்கெனவே ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. கேங்ஸ்டர் படமான அதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த படமும் வெளிநாடுகளில் படமாவது ஒரு காரணம் என்றாலும், இப்படமும் கேங்ஸ்டர் படமென்பதால் அஜித்தே வில்லனாகவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இப்படத்தில் ஒரு வில்லனுக்கு நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இன்னொரு வில்லனாக அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த செய்திகள் எல்லாம் படக்குழுவினரால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top