ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தியதாக கூறி சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

slamic-groups-protest-in-Chennai-demand-govt-cease_SECVPF (1)

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங் கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார்.

எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர்.

கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி, மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில், ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது, ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி, வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது, முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top