இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் கோல்கீப்பர் கரன்ஜித்சிங் நீட்டிப்பு

indian_football_player_karanjit_singh

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையின் எப்.சி. அணியில் இடம் பிடித்து இருந்த கோல்கீப்பர் கரன்ஜித்சிங் (பஞ்சாப்), நடுகள வீரர் தோய்சிங் (மணிப்பூர்) பின்கள வீரர் மெக்ராஜூதின் வாடூ (காஷ்மீர்) ஆகிய 3 பேருடனான ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் 3 வீரர்களும் இந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையின் எப்.சி.அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்ராசி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சீசனில் எங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்த 3 வீரர்களும் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top