வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

Ravindra-Jadeja

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தான் மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை (4 டெஸ்ட்) வெல்வதில் முழு கவனம் கொண்டுள்ளோம்.

சொந்த மண்ணில் இந்தியா எளிதாக வெற்றி பெற்று விடும் என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். ரசிகர்களின் அந்த எண்ணத்தை மாற்ற ஆசைப்படுகிறோம். அதாவது வெளிநாட்டிலும் எங்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்ட விரும்புகிறோம். இது இளம் வீரர்களை கொண்ட அணி. உடல்தகுதியிலும், ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதிலும் வீரர்கள் சிறந்த நிலையில் உள்ளனர். நல்ல விதமாக தொடருக்கு தயாராகி இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்.

இவ்வாறு ஜடேஜா கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top