வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: 364 ரன்கள் குவித்தது இந்தியா பதிவு: ஜூலை 16, 2016 03:12 Share

prv_04d4b_1468601569

இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

அதன்படி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு பிரெசிடென்ட் லெவன் அணி 180 ரன்னில் சுருண்டது.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 364 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். ரவிந்தர் ஜடேஜா 56 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி தரப்பில் கிரைவுன் வால் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சினை விளையாட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவை விட இன்னும் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top