ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் தமிழக அரசு கோரிக்கை

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த வழக்கின் மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியது.

LTTE_rajiv_erarivalan-murugan-santhan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உத்தரவு வெளியிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

அதன்படி, வரும் 18–ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்ஜன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி ‘தமிழக அரசு சார்பில் வாதாடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் ராகேஷ் திவேதிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கின் மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்ய நேற்று அனுமதி கோரினார்.

தமிழக அரசு கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள்.

இதன்படி வரும் 18–ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது விசாரணையை தள்ளிவைக்கும் தேதி பற்றிய விவரம் தெரியவரும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top