ஹெலிகாப்டர் பேர ஊழல் சோனியா-மன்மோகன்சிங் மீது வழக்கு தொடர உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்கு தொடர உத்தர விட முடியாது என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Helicopter-deal-Sonia-Manmohan-corruption-can-order-the_SECVPFமுந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண் நிறுவனத்தில் இருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி தியாகி மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மாகன்சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி வக்கீல் எம்.எல்.சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது சோனியா- மன்மோகன்சிங் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட முடியாது என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top