பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

சர்வதேச பேட்மிண்டன் வீரர் – வீராங்கனை தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனையாக பி.வி.சிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க பேட்மிண்டன் ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் 20-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஸ்ரீகாந்த் 11-வது இடத்திலும், பிரணாய் 29-வது இடத்திலும், சாய்பிரனீத் 35-வது இடத்திலும் சமீர் வர்மா 38-வது இடத்திலும் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top