புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது: வைகோ

கல்வித்துறையை வணிகமயமாக்கி, பன்னாட்டுச் சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

vaiko

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கொள்கையை அமைக்க மத்திய அரசு நியமித்த குழுவில் ஒருவர் கூட கல்வியாளர் இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் ஒருவர் அதில் நியமிக்கப்பட்டதிலிருந்து பாஜக அரசின் நோக்கம் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இணையம் வாயிலாக கருத்து கேட்ட பின் புதிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள வைகோ கல்வியை சந்தை பொருளாக சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரைகள் வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகளை புதிய குழு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார். கல்வித்துறை நிறுவனங்களை அழிப்பதற்கான முயற்சி இது என்று குற்றஞ்சாட்டியுள்ள வைகோ, இலவச கல்வி அழித்தல், சமஸ்கிருத மொழி திணிப்பு உள்ளிட்டவைகளுக்கே புதிய கல்விக்கொள்கை
வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்க கூடாது என்றும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top