சரவணன் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்

Father-Urges-for-will-have-to-investigate-the-mysterious_SECVPF

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன். பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சரவணன் (வயது 24).

மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த சரவணன், மேல் படிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார்.

சரவணன், டெல்லி கவுதம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சரவணன், தங்கி இருந்த வீட்டில் வி‌ஷ ஊசி போட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைதொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் கோவை எடுத்து வரப்பட்டது.

கோவையில் இருந்து சரவணனின் உடல் திருப்பூரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை கண்டு தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சரவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து சரவணனின் தந்தை கணேசன் கூறியதாவது:-

எனது மகன் மரணம் குறித்து 10-ந்தேதி காலையில் எனக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறியடைத்து நான் உள்பட 4 பேர் சென்றோம். சரவணன் உடலை 11-ந்தேதி பிரேத பரிசோதனை நடந்தது. இது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனவே சாவில் மர்மம் உள்ளது. இதனால் உண்மையை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top