அர்த்தநாரி திரைவிமர்சனம்

Indian-athletes-qualified-for-the-Olympic-competition-and-3_SECVPF

கதாநாயகன்-கதாநாயகி: ராம்குமார்-அருந்ததி.
டைரக்‌ஷன்: சுந்தர இளங்கோவன்.

கதையின் கரு: குழந்தை தொழிலாளர்களும், ஒரு ‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியும்…

ஏழை சிறுவர்-சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து தனது தொழிற்சாலைகளில் வேலை செய்ய வைக்கிறார், சுதாகர். இதில், அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்படுகிறார், சம்பத்ராம். இவருடைய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களை மீட்டு, படிக்க வைக்கிறார், நாசர். இதனால் நாசர் மீது ஆத்திரப்படுகிறார், சுதாகர்.

நாசரால் வாழ்வு பெற்று என்ஜினீயராகியிருப்பவர், ராம்குமார். இவருக்கும், ‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரி அருந்ததிக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில், சுதாகரின் ஆட்களால் நாசர் கொலை செய்யப்படுகிறார்.

கொலையாளியை வேட்டையாட அருந்ததி ஒரு பக்கமும், ராம்குமார் இன்னொரு பக்கமுமாக செல்கிறார்கள். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பது, ‘கிளைமாக்ஸ்’.

கதாநாயகன் ராம்குமார் (அறிமுகம்), கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. அருந்ததி ஒரு போலீஸ் அதிகாரி என்று தெரிந்தும், அவரை இவர் பின்தொடர்ந்து வந்து காதலிப்பது நம்பும்படி இல்லை. அருந்ததி உடல் மொழியாலும், நடை- உடை-பாவனை-வசன உச்சரிப்பாலும் ஒரு போலீஸ் அதிகாரியாகவே மாறியிருக்கிறார். துப்பாக்கியும் கையுமாக இவர் வில்லன் கும்பலை வேட்டையாடும் காட்சிகள்தான் படத்தின் பலம்.

நாசர், ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் பெரியவராக வாழ்ந்திருக்கிறார். முக்கிய வில்லனாக வரும் சுதாகர், இவருடைய கைத்தடிகளாக வரும் சம்பத்ராம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன், அருந்ததியின் அப்பாவாக வரும் ராஜேந்திரநாத் ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.

இசை: செல்வகணேஷ். பாடல் காட்சிகள் கவனம் ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு ஷீவனாக அமைந்துள்ளன. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சுந்தர இளங்கோவன். ‘கிளைமாக்ஸ்’சில் கதாநாயகனுக்கு ஏன் அந்த முடிவு? படத்தின் டைட்டிலுக்கும், கதைக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு விளக்கம் இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top