அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியையே ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

opமேலும் அம்மாநில ஆளுநர் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் சாசன சட்டத்திட்டங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, ஆளுநர் பிறப்பித்த அத்தனை உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தனித்து செயல்பட்டதால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அம்மாநிலத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் 31 எம்எல்ஏ.க்கள் கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள், 11 பாஜக எம்எல்ஏ.க்கள், 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் அடங்குவர்.

இதையடுத்து, “அருணாச்சலில் புதிய அரசு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் அன்று பிறப்பிக்கவில்லை. அருணாச்சலில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியையே ஆட்சியில் அமர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top