இந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமானதாக இருக்கும்

Jason-Holder

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறினார்.

ஆன்டிகுவாவில் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறுகையில், “டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகத் திறம்பட இருக்கும்.

அனுபவமில்லா இளம் வீரர்களைக் கொண்ட எங்களது அணிக்கு, இந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும்’ என்றார்.

தினேஷ் ராம்தினுக்கு தடை: இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தினுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், அவருக்கு எத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான அறிவிப்பை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கு இடம் கிடைக்காதது தொடர்பாக கடந்த வாரம் அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவின் அடிப்படையில் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அணி வீரர்கள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிரத்வெய்ட் (துணை கேப்டன்), தேவேந்திர பிஷு, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிரத்வெய்ட், டெரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச் (விக்கெட் கீப்பர்), ஷானன் கேப்ரியல், லியோன் ஜான்சன், மார்லன் சாமுவேல்ஸ்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top