சானியாவின் சுயசரிதை: ஷாரூக் கான் வெளியிடுகிறார்

sania-mirza-srk-twitter

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுய சரிதையை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் புதன்கிழமை வெளியிடுகிறார்.

சானியா மிர்சாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அவரது சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த புத்தகம், ஒரு வாரத்துக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுயசரிதை எழுத வேண்டும் என்பது சானியாவின் சொந்த விருப்பமே. இதனை எழுதி முடிக்க அவருக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. இதுவரை சானியாவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை இதில் அவர் எழுதியுள்ளார்.

தனது வாழ்வில் சந்தித்த முரண்பாடுகள் பற்றியும் இதில் சானியா குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு, வாழ்க்கை என அனைத்து விஷயங்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் சானியா மனம் திறந்துள்ளார் என்றார்.

ஆங்கிலத்தில் “ஏஸ் ஆட்ஸ்’ என்ற பெயரிலான சானியாவின் சுயசரிதை ஹார்பெர் காலின்ஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை, தில்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. தனது 5 வயதிலிருந்து, தற்போது வரையிலான வாழ்க்கை அனுபவத்தை 40 அத்தியாயங்களாக தனது சுயசரிதையில் சானியா எழுதியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top