சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

sushila-pukhrambam-india-women-hockey

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான தீபிகா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பு குறித்து சுஷிலா சானு கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், மிகப்பெரிய பொறுப்பு என்பதால் சற்று பதற்றத்துடன் உணர்கிறேன். ஜூனியர் ஹாக்கியில் கேப்டனாக இருந்ததால், சிறிது அனுபவம் உள்ளது’ என்றார்.

பரிசுத் தொகை: இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள ஒடிஸாவைச் சேர்ந்த 4 வீராங்கனைகளுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.50,000 பரிசுத் தொகையை அறிவித்தது.

தீப் கிரேஸ் ஈகா, நமீதா டாப்போ, லிலிமா மின்ஸ், சுனிதா லக்ரா ஆகிய 4 வீராங்கனைகளுக்கு இந்த வெகுமதி வழங்கப்படுவதாக ஒடிஸா விளையாட்டுத் துறை அமைச்சர் சுதம் மராண்டி கூறினார்.

அதேபோல, ஒடிஸா மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 4 வீராங்கனைகளுக்கும் தலா ரூ.20,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அச்சங்கத்தின் செயலர் ஆசிர்வாத் பெஹேரா அறிவித்துள்ளார். மாநில ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 4 பேருக்கும் தலா ரூ.10,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு… கடந்த 36 ஆண்டுகளில், ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்றிருந்தது.

அணியின் விபரம்: சுஷிலா சானு (கேப்டன் மற்றும் தடுப்பு ஆட்டக்காரர்), நவ்ஜோத் கெளர், தீப் கிரேஸ் ஈகா, மோனிகா, நிக்கி பிரதான், அனுராதா தேவி தோக்சம், சவிதா, பூனம் ராணி, வந்தனா கட்டாரியா, தீபிகா (துணை கேப்டன்), நமிதா தோப்போ, ரேனுகா யாதவ், சுனிதா லக்ரா, ராணி, பிரீத்தி துபே, லிலிமா மின்ஸ்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top