பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை:தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்துக்கு சிறிதளவும் தண்ணீர் கிடைக்காத வகையில், பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் விதிகளை மீறி தடுப்பணைகளைக் கட்டியுள்ளதோடு, பல இடங்களில் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது.

வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகே பெரும்பள்ளம் எனும் இடத்தில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளையும் ஆந்திர அரசு செய்துவருகிறது.

இப்போது, மேலும் ஒரு பேரிடியாக மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலை கைப்பற்றவும் ஆந்திர அரசு முயற்சிக்கிறது.

ஆந்திர அரசின் நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top