சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

yhyh

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில், வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். மணிமாறன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மகன் ராஜேஷ் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் மணிமாறனின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மதிய வேளையில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மணிமாறன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top