தாமிரவருணியில் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தாமிரவருணி நதி பாதுகாப்பு இயக்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், திருநெல்வேலி மாவட்ட பொதுநல அமைப்பு ஆகியன சார்பில் அளிக்கப்பட்ட மனு: மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் தாமிரவருணி நதி திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தொடங்கி 120 கி.மீ. பாய்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.

11168495_911589765562545_2275910548915124663_n

இந்நதியின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரவருணியில் வழிநெடுகிலும் ஆலைக் கழிவுகள், சாக்கடை கழிவுகள், ரசாயனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கலக்கின்றன. பெருமளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் தாமிரவருணி நதி தனது அடையாளத்தை, தூய்மையை இழந்து வருகிறது. இந்த நதி நாளடைவில் சென்னை கூவம் ஆற்றைப்போன்று மாறும் அபாயம் உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள தாமிரவருணி பாசனக் கால்வாய்களும் மாசுபட்டு வருகின்றன. தாமிரவருணி, பாசனக் கால்வாய்களை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து நதியை மீட்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நதியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். நதியில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை: நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு சார்பில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் பாலங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள், அரசு கட்டடத்தின் சுற்றுச் சுவர், பேருந்து நிறுத்தங்கள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள், தரைப் பாலங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் அனுமதி பெறாமலும், அத்துமீறியும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், ஜாதிக் கட்சிகள், ஜாதி அமைப்புகளின் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. இதனால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top