ஜப்பானில் நடைபெறும் சூப்பர் பார்முலா கார் பந்தயத்தில் சாதனை படைப்பேன்: நரேன்கார்த்திகேயன் பேட்டி

கோவையில் நடந்த ஒரு விழாவில் பார்முலா–1 கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

ஆரம்ப கால கட்டத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது குறித்து எனக்கு எந்த விழிப்புணர்வும் கிடையாது . ஆனால் தற்போது அது எனக்கு தேவையான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் கார் பந்தய வீரர்களுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது முக்கியமானதாகும்.

நான் தற்போது ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வரும் ‘சூப்பர் பார்முலா–1 2016’ கார் பந்தய போட்டியில் 3– வது முறையாக பங்குபெற உள்ளேன். இதற்காக அங்கு சென்று பயிற்சி பெற்று வருகிறேன். இந்த போட்டி வருகிற அக்டோபர் மாதம் வரை நடக்கிறது. இதில் நான் கலந்து கொண்டு நிச்சயம் சாதனை படைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நடிகர் சேது ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top