ஐரோப்பியக் கோப்பையை முதல் முறையாக வென்றது போர்ச்சுக்கல் அணி

poru_wonஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் அணி முதன் முறையாக  சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கூடுதல் நேரத்தில் மாற்றுவீரராக களம் இறங்கிய ஈடர் அடித்த அபாரமான கோல் மூலம் அந்த அணி பிரான்சை வீழ்த்தி கோப்பையை வென்றது.

உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 24 நாடுகளின்  அணிகள்  இந்த தொடரில் பங்கேற்றன. இறுதிப்போட்டி பாரிஸ் நகரில் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள போர்ச்சுக்கல் அணிக்கும் 17வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை ஆர்வமுடன் கண்டுரசித்தனர். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 25வது நிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்து கண்ணீர்விட்டபடியே வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கட்ட வீரர் வெளியேறியதால் போர்ச்சுல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இரு அணிவீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மாறி, மாறி கோட்டைவிட்டதாலும்  போர்ச்சுக்கல், பிரான்ஸ்  கோல் கீப்பர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டதாலும் இந்த பாதியிலும் கோல் எதுவும் விழவில்லை. இதையடுத்து கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

இதில் ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடித்தார். ஆட்டம் முடிய பத்து நிமிடங்களே இருந்த நிலையில் இந்த கோல் அடிக்கப்பட்ட நிலையில் போர்ச்சுக்கலின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.

இதையடுத்து பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிப்பதில் மிகவும் தீவிரகாட்டினார். ஆனால் அவர்களை கோல் அடிக்க விடாமல் போர்ச்சுக்கல் வீரர்கள் அபாராமாக தடுத்தனர். இதையடுத்து 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பியக் கோப்பையை முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி தட்டிச் சென்றது.

தங்கள்நாட்டு அணியின் வெற்றியை மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த போர்ச்சுக்கல் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஐரோப்பிய கோப்பை வெற்றியைக் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள ரசிகர்களும் பண்டிகையைப் போல உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top