தில்லுக்கு துட்டு திரைவிமர்சனம்

கதாநாயகன்-கதாநாயகி: சந்தானம்-சனாயா.
டைரக்‌ஷன்: ராம்பாலா.

201607110340513404_thillukku-thuttu-in-movie-review_SECVPF

கதையின் கரு: ஒரு காதல் ஜோடியும், பேய் பங்களாவும்…
சந்தானம், சனாயா இருவரும் பள்ளிப்பருவத்து நண்பன்-தோழி. இரண்டு பேரும் வளர்ந்து வாலிபமான நிலையில், மீண்டும் சந்திக்கிறார்கள்.

காதல்வசப்படுகிறார்கள். சந்தானம், ஏழை நடுத்தர வர்க்கம். சனாயா, பணக்கார மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் காதலை சனாயாவின் தந்தை விரும்பவில்லை. திருமணத்துக்கு சம்மதிப்பது போல் நடித்து சந்தானத்தையும், அவர் குடும்பத்தையும் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார், மொட்டை ராஜேந்திரன் உதவியுடன்…

இதற்காக ஒரு காட்டு பங்களாவை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு பேர் குடும்பத்தினரும் காட்டு பங்களாவுக்கு போகிறார்கள். அந்த பங்களாவுக்குள் இரண்டு பேய்கள் இருக்கின்றன. அந்த பேய்களிடம் திருமண கோஷ்டி சிக்கிக்கொள்கிறது. பேய்களிடம் இருந்தும், சனாயா தந்தையின் கொலை சதியில் இருந்தும் சந்தானமும், சனாயாவும் மீண்டு வந்தார்களா, இல்லையா? என்பது மீதி கதை.

நகைச்சுவை நாயகனாக சந்தானம். சனாயாவுடன் காதல், டூயட், அடியாட்களுடன் சண்டை என கதாநாயகனுக்குரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். நடனத்தில், ஆச்சரியப்படுத்துகிறார். அவ்வப்போது கேலி-கிண்டல் வசனம் பேசி, தியேட்டரை ஆரவாரமாக வைத்து இருக்கிறார்.

சனாயா, வட இந்திய முகம். கொஞ்சம் நடிக்கவும் தெரிந்து இருக்கிறது. தன் வீட்டில் திருட வந்த சந்தானத்துக்கு இவர் பீர் கொடுத்து குடிக்க வைத்து மாட்டிவிடும் இடம், ரசிக்கும்படி இருக்கிறது. கருணாஸ், படம் முழுக்க கலகலப்பூட்டுகிறார். சந்தானத்தின் அப்பாவாக ஆனந்தராஜ். சினிமாவில் டூப் போடும் நடிகராக வருகிறார். அவருடைய தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசம். “கொஞ்சம் காமெடி பண்ணினா போதும்…நான் வில்லன் என்பதையே மறந்துடுவீங்களே?” என்று இவர், ‘பஞ்ச்’ அடிக்கும்போது, கைதட்டுகிறார்கள். சனாயாவின் தந்தையாக வரும் சவுரவ் சுக்லா, பொருத்தமான தேர்வு. மொட்டை ராஜேந்திரன் எல்லா படத்தையும் போல் இதிலும் சிரிப்பு வில்லன். தீபக்குமார்பாடியின் கேமராவும், எஸ்.எஸ்.தமனின் பின்னணி இசையும் அங்கங்கே பயமுறுத்துகின்றன.

ஒரு காதல் ஜோடிக்கும், பேய் பங்களாவுக்கும் முடிச்சு போட்டு கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ராம்பாலா. சிவன் கொண்டை மலை கிராமத்து ஆட்களை பலி வாங்கும் பேய், அதை அடக்க வரும் திபெத் சாமியார் என படத்தின் ஆரம்பம், நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அப்புறம் கதை, வழக்கமான தமாஷ் ‘ரூட்’டுக்கு மாறுகிறது. சந்தானம், ஆனந்தராஜ், கருணாஸ் குடும்பத்தினர் சிவன் கொண்டை மலைக்கு புறப்பட்டதும், பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அதன்பிறகு வரும் காட்சிகள், விறுவிறுப்பு


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top