வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

201607101102405435_West-Indies-training-match-Rohit-Sharma-Shikhar-Dhawan-to_SECVPF

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி இன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் லெவனுடன் மோதிய முதல் பயிற்சி ஆட்டம் செயின்ட்கிட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் பயிற்சி ஆட்டமான இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா, தொடக்க வீரர்கள் ஷிகார் தவான், ராகுல் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 54 ரன்னும், தவான் 51 ரன்னும், ராகுல் 50 ரன்னும், புஜாரா 34 ரன்னும் எடுத்தனர். விராட் கோலி 14 ரன்னும், ரகானே 5 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

இன்றைய 2-வது மற்றும் கடைசி நாளில் இந்திய அணி ஆட்டத்தை முடித்து பந்துவீச்சில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top